ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் கடைசி பாகத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நடிக்கவுள்ளார்.
படக்குழுவுடன் ரொனால்டோ
படக்குழுவுடன் ரொனால்டோInstagram | Tyrese
Updated on
1 min read

ரொனால்டோ : பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் கடைசி பாகத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படங்களின் கடைசிப் பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோவும் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு, படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் ரொனால்டோவும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில், ரொனால்டோவுக்காகவே ஒரு பாத்திரம் எழுதப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படங்களுக்கும் சரி, ரொனால்டோவுக்கும் சரி - உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்திலேயே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

Summary

Cristiano Ronaldo joins Fast & Furious cast

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com