

தித்வா புயலால் இலங்கையில் பேரழிவு:
தித்வா புயலால் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் கடந்த நவ. 28-இல் கரையைக் கடந்த தித்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பெருவெள்ளம், மழை பாதிப்புகளால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 643 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 20 ஆண்டு காலத்தில் இலங்கை சந்தித்திடாத இயற்கைப் பேரழிவாக தித்வாவின் தாக்கம் இலங்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. இதையடுத்து, இலங்கையின் பொருளாதாரம் சீர்குலையாமல் பாதுகாக்கும் நடவடிக்கையாக உடனடி நிதி வழங்கல் கொள்கை மூலம் இலங்கைக்கு 20.6 கோடி டாலர் அவசரகால நிதியை விடுவிக்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.