

தென்னாப்பிரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள தங்கச் சுரங்கப் பகுதியான பெக்கர்டாலில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஓர் உணவு விடுதி அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். மேலும், 10 பேர் காயமடைந்தனர்.
இரு வாகனங்களில் வந்த அடையாளம்தெரியாத மர்ம நபர்கள், திடீரென தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக 63 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. கொள்ளை மற்றும் கும்பல் வன்முறைகளும் உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.