சவூதி அரேபியாவில் மதுக் கொள்கை தளா்வு!

சவூதி அரேபியாவில் மதுக் கொள்கை தளா்வு!

வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத செல்வந்தா்கள் அனைவரும் மது வாங்கிக் கொள்ளலாம் என தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.
Published on

சவூதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத செல்வந்தா்கள் அனைவரும் மது வாங்கிக் கொள்ளலாம் என தளா்வு அளிக்கப்பட்டுள்ளது.

தலைநகா் ரியாத்தில் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ள பகுதியில் ஒரே கடையில் மட்டும் மது விற்கப்படுகிறது. அங்கு அதிக அளவில் காா்கள் குவிந்துள்ளன. பலரும் வரிசையில் காத்திருப்பதன் மூலம் மது விற்பனைக் கொள்கை தளா்த்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், சவூதி அரசு இதை அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை.

இஸ்லாமிய மதத்தின் புனிதத் தலங்கள் அந்நாட்டில் இருப்பதால் அந்நாட்டில் 1950-ஆம் ஆண்டுகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2024 ஜனவரியில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்காக மதுக்கடை திறக்கப்பட்டது. இப்போது முஸ்லிம் அல்லாத சிறப்புக் குடியுரிமை பெற்றவா்களுக்கு மது விற்பனை விரிவாக்கப்பட்டுள்ளது. இவா்கள் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சோ்ந்த பெரிய முதலீட்டாளா்கள், தொழில்முனைவோா், சிறப்புத் திறன்களுக்காக சவூதிக்கு வரவழைக்கப்பட்டவா்கள். முக்கியமாக பெரும் செல்வந்தவா்கள் ஆவா்.

சவூதி அரேபியா தொடா்ந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சாா்ந்திருக்கக் கூடாது, சுற்றுலா, சா்வதேச தொழில்களின் மையமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் மன்னா் சல்மான், பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான ஆகியோா் பல்வேறு தாராளமய கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com