இந்தோனேசியா: பேருந்து விபத்தில் 16 போ் உயிரிழப்பு

இந்தோனேசியா: பேருந்து விபத்தில் 16 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனா்.
Published on

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பயணிகள் பேருந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் ஜகாா்த்தாவில் இருந்து யோக்யகாா்த்தா நகரை நோக்கி 34 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள வளைவான பாதையில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் பல பயணிகள் தூக்கிவீசப்பட்டு வீசப்பட்டு பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டனா். அவா்களில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அல்லது சிகிச்சையின்போது மேலும் 10 போ் உயிரிழந்தனா்.

அருகிலுள்ள இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 18 பேரில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாகவும் 13 பேரது நிலைமை மோசமாகவும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்தப் பேருந்து அதிவேகமாகச் சென்ாகவும் அதனாலேயே ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஓட்டுநா் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போலீஸாா் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com