

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 34 பேர்களுடன் சுங்கச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச்சுவர் மீது பக்கவாட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்தில் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பழமையான அரச நகரமான யோக்யகர்த்தாவுக்கு பேருந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக தேடுதல் மற்றும் மீட்புக் குழு அதிகாரி புடியோனோ தெரிவித்தார்.
முன்னதாக ஜகார்த்தாவில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு 22 பேர் அண்மையில் பலியாகினர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த இரண்டு வாரத்திற்குள் தற்போது பேருந்து விபத்தில் மேலும் 15 பேர் பலியாகியிருப்பது இந்தோனேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.