வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! போப் 14ஆம் லியோ உரை!!

வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14ஆம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
வாடிகன் நகரில்
வாடிகன் நகரில் AP
Updated on
2 min read

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் நேற்று இரவு நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் புதிய போப் 14-ஆம் லியோ முதல்முறையாக உரையாற்றினார்.

உலகமெங்கும் இருந்து வந்திருந்த ஏராளமான கிறிஸ்துவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இதில் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர். புதன்கிழமை மாலை முதல் புனித பீட்டர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டது. இதனை உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் கண்டனர்.

ரோமன் கத்தோலிக்க அவையின் தலைவரான போப் 14ஆம் லியோ, வாடிகன் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அவர் தன்னுடைய உரையில், கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பற்றி விவரிக்கையில், மனித குலத்தைக் காக்க குழந்தை இயேசு பிறந்ததை வியந்து கூறினார்.

AP

ஏழைகளின் துன்பங்களை எதிர்கொள்ளவும், அவர்களை பாதுகாக்கவும் கடவுள் மீண்டும் பலமான ஒருவரை அனுப்புகிறார் என்று மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்த வாடிகன் நரின் பசிலிகாவில் உள்ள சதுக்கத்தில் போப் 14ஆம் லியோ உரையாற்றினார்.

Domenico Stinellis

புனித செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலியின்போது, போப் 14ஆம் லியோ, குழந்தை இயேசு பிறந்ததை அறிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பிறகு போப் 14ஆம் லியோ உரையாற்றினார்.

AP

உலகம் முழுவதும் போர், வன்முறைகள் ஓய்ந்து, உலகில் மனிதநேயம் தழைக்க வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்று போப் 14ஆம் லியோ வலியுறுத்திப் பேசினார்.

AP

வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், கடந்த ஏப்ரம் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அதையடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த கார்தினல் ராபர்ட் பெர்வோஸ்ட், கடந்த மே மாதம், போப் பதினான்காம் லியோவாகப் பதவியேற்றார்.

Gregorio Borgia

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் அவர் தன்னுடைய முதல் உரையை ஆற்றியிருக்கிறார். அதில், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com