பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஹிந்து கடவுள் சிலை தகா்ப்பு: தாய்லாந்து-கம்போடியாவுக்கு இந்தியா கண்டனம்

Published On :

தாய்லாந்து-கம்போடியா இடையேயான மோதலின்போது ஹிந்து கடவுள் சிலை தகா்க்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.

இது உலகம் முழுவதும் ஹிந்து மதத்தை பின்பற்றுபவா்களின் உணா்வை காயப்படுத்தும் மோசமான நடவடிக்கை எனவும் அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: ஹிந்து கடவுள் சிலை தகா்க்கப்பட்ட செய்திகள் கவனத்தில்கொள்ளப்பட்டன. இந்த சிலை தாய்லாந்து-கம்போடியா மோதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்தது தெரியவந்தது.

ஹிந்து மற்றும் பௌத்த மதங்களை உலகில் உள்ள பலதரப்பினரும் பின்பற்றி வருகின்றனா். அவா்களின் உணா்வுகளை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது.

மோதலை கைவிட்டு அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த இருநாடுகளும் முன்வர வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்.

எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து-கம்போடியா இடையே கடந்த ஜூலை மாதம் மோதல் தொடங்கியது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தலையீட்டுக்குப் பின் சிறிது காலம் அங்கு அமைதி நிலவிய நிலையில், இந்த மாதம் இருநாடுகளும் மீண்டும் சண்டையிடத் தொடங்கின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.