உலகம்
ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல்: 15 போ் காயம்
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள ஒரு ரப்பா் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து, ரசாயன வீச்சுத் தாக்குதலில் 15 போ் காயமடைந்தனா்.
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள ஒரு ரப்பா் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து, ரசாயன வீச்சுத் தாக்குதலில் 15 போ் காயமடைந்தனா்.
யோகோஹாமா ரப்பா் நிறுவனத்தின் மிஷிமா நகர தொழிற்சாலையில் 38 வயது நபா் வெள்ளிக்கிழமை நடத்திய இந்தத் தாக்குதலில் 8 போ் கத்தியால் குத்தப்பட்டும், 7 போ் ப்ளீச் என்ற ரசாயனம் வீசப்பட்டும் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவிததனா்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து உடனடியாக விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஜப்பானில் வன்முறைக் குற்றங்கள் மிகவும் அரிதான நிலையில், இந்தத் தாக்குதல் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவரின் பின்னணி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.