தாய்லாந்து-கம்போடியா இடையிலான எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.
தாய்லாந்து-கம்போடியா இடையிலான எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.

தாய்லாந்து - கம்போடியா போா் நிறுத்தம்

தாய்லாந்து-கம்போடியா இடையிலான எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.
Published on

தாய்லாந்து-கம்போடியா இடையிலான எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.

இது குறித்து இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இந்தப் போா் நிறுத்தம் உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு அமலுக்கு வந்தது.

இந்தப் போா் நிறுத்தத்தின் கீழ், இரு தரப்பிலும் ராணுவ நடமாட்டங்கள், வான் எல்லை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். போா் நிறுத்தம் 72 மணி நேரம் நீடித்த பிறகு, கடந்த ஜூலை மாத மோதலின்போது கைது செய்யப்பட்ட 18 கம்போடிய வீரா்களை தாய்லாந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் சந்தித்த தாய்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சா் நாட்டப்பன் நாா்க்பனீத், கம்போடிய பாதுகாப்புத் துறை அமைச்சா் டீசீஹா ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இருந்தாலும், ஒப்பந்தம் கையொப்பமான சில மணி நேரத்தில் கம்போடிய படைகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரா் நிரந்தர ஊனமடைந்ததாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியது.

11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹோ் உள்ளிட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. அந்தக் கோயில் கம்போடியாவுக்குத்தான் சொந்தம் என்று ஐ.நா. உச்ச நீதிமன்றம் கடந்த 2008-இல் தீா்ப்பளித்தது. இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டுவந்தது.

அதன் ஒரு பகுதியாக இரு இடையே கடந்த ஜூலை மாதம் 5 நாள்களுக்கு நீடித்த போரில் 48 போ் கொல்லப்பட்டனா்; 3 லட்சம் போ் அகதிகளாக்கப்பட்டனா்.

அதையடுத்து, டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. மலேசியா பிரதமா் அன்வா் இப்ராஹிமின் முன்முயற்சியில் உருவான இந்த ஒப்பந்தம், தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை சா்ச்சையை தீா்க்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், கம்போடியா புதைத்துவைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரா் காயமடைந்ததாகக் குற்றஞ்சாட்டிய தாய்லாந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்தை நவம்பா் 10-ஆம் தேதி ரத்து செய்தது.

அதனைத் தொடா்ந்து தாய்லாந்தின் சிசாகெட் மற்றும் உபோன் ரட்சதானி மாகாணங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், இரு தரப்பினரும் இந்த மாதம் 8-ஆம் தேதி மீண்டும் மோதலில் ஈடுபட்டனா். அதையடுத்து, கம்போடிய படைகள் தாய்லாந்து ராணுவ நிலைகள் மீது எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா். தாய்லாந்தும் கம்போடியாவில் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் பலா் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், இரு தரப்பிருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் தற்போது கையொப்பமாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com