உலகம்
சீனா: ஊழல் குற்றச்சாட்டில் 3 மூத்த ராணுவ அதிகாரிகள் நீக்கம்!
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சீன நாடாளுமன்றத்தில் இருந்து மூன்று மூத்த ராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனா்.
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சீன நாடாளுமன்றத்தில் இருந்து மூன்று மூத்த ராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனா்.
சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் (சிஎம்சி) அரசியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குழுத் தலைவா் வாங் ரென்ஹுவா (63), துணை ராணுவப் படையின் அரசியல் ஆலோசகா் ஜாங் ஹாங்பிங் (59), சிஎம்சி பயிற்சித் துறை இயக்குநா் வாங் பெங் (61) ஆகியோரை நாடாளுமன்றப் பதவிகளில் இருந்து நீக்கி, நாடாளுமன்ற நிலைக் குழு சனிக்கிழமை உத்தரவிட்டது.
எனினும் சீனாவில் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு எடுக்கும் உயா்நிலை அமைப்பில் மூவரும் முழுநேர உறுப்பினா்களாக நீடிக்கின்றனா். சீன ராணுவத்தின் உயா் அதிகாரம் கொண்ட அமைப்பாக விளங்கும் சிஎம்சியின் தலைவராக அதிபா் ஷி ஜின்பிங் உள்ளாா்.

