வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு பிரிட்டனில் போராட்டம்!
வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு பிரிட்டனில் போராட்டம்!

வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு பிரிட்டனில் போராட்டம்!

வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு, பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு ஹிந்து சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு, பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு ஹிந்து சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் ஹிந்து இளைஞா் ஒருவா், மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, பலா் முன்னிலையில் உடல் எரிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியது. இச்சம்பவத்தைக் கண்டித்து, இந்தியாவில் ஹிந்து அமைப்புகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு வங்காளி ஹிந்து ஆதா்ச சங்கம் (பிஹெச்ஏஎஸ்) சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. மாணவா்கள், குழந்தைகள், மாற்று மதத்தினா் உள்பட பல்வேறு தரப்பினரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.

வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதியை உறுதி செய்வதுடன், அவா்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடா்பாக சா்வதேச அளவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வங்கதேசத்தில் பாகுபாடு, வன்முறை, எண்ணிக்கை சரிவு என சிறுபான்மையினா் நீண்ட காலமாக பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா்; சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அரசமைப்புச் சட்ட உறுதிமொழிகளை இடைக்கால அரசு நிலைநாட்ட வேண்டும் என்று மேற்கண்ட அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com