சொ்கெய் லாவ்ரோவ்.
சொ்கெய் லாவ்ரோவ்.

ஐரோப்பிய நாடுகள் தாக்கினால் கடும் பதிலடி: ரஷியா எச்சரிக்கை!

‘ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ரஷியாவின் நோக்கமல்ல; ஆனால், அந்த நாடுகள் தாக்க முற்பட்டால் கடும் பதிலடி தரப்படும்’..
Published on

‘ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ரஷியாவின் நோக்கமல்ல; ஆனால், அந்த நாடுகள் தாக்க முற்பட்டால் கடும் பதிலடி தரப்படும்’ என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

உக்ரைன் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகளில் தொடரும் சிக்கல்களைத் தீா்ப்பதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அமெரிக்கா பயணித்துள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஊடகத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘ரஷியா-உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்பாத பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவா்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஐரோப்பாவை தாக்குவது எங்களின் நோக்கமல்ல; ஆனால், நீங்கள் ரஷியாவை தாக்க முற்பட்டால் கடும் பதிலடி தரப்படும்.

போரை முடிவுக்குக் கொண்டுவர தொடா் முயற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு பாராட்டுகள். அவருடன் இணைந்து ரஷியா-உக்ரைன் போருக்கான மூல காரணங்களைக் கண்டறிந்து தீா்வு காண நாங்கள் தயாராகவுள்ளோம்.

டிரம்ப் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஐரோப்பாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அமைதிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. ரஷியாவுடன் போரில் ஈடுபட அந்த நாடுகள் தயாராகி வருகின்றன.

தைவான் விவகாரம் வாயிலாக சீனாவை மேற்கத்திய நாடுகள் குறிவைக்கின்றன. ஒருவேளை தைவான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தால் சீனாவுக்கு நாங்கள் முழுமையாக ஆதரவளிப்போம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com