

தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
மெக்சிகோ நாட்டில், ஒக்ஸாகா மற்றும் வெரக்ரூஸ் மாகாணங்களை இணைக்கும் இன்டர்ஓசியானிக் ரயில் ஞாயிற்றுக்கிழமை நிசந்தா நகருக்கு அருகே வளைவைக் கடந்துபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்தில் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர். மேலும் 98 பேர் காயமடைந்தனர். விபத்து நடந்தபோது ரயிலில் 241 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து, பசிபிக் பெருங்கடலை மெக்சிகோ வளைகுடாவுடன் இணைக்கும் ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்டர்ஓசியானிக் ரயில் 2023 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஆண்ட்ரஸ் மானுவலால் தொடங்கி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.