கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! தாயாருக்காக மன்னிப்பு கோரிய மகன்!

வங்கதேச முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு...
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா.
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா.(கோப்புப் படம்)
Updated on
1 min read

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வங்கதேச நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவி வகித்த கலீதா ஜியா நீண்ட நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச. 30) காலை காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டாக்காவில் இன்று மதியம் நடைபெற்ற முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் வங்கதேசத்தின் இடைக்கால ஆலோசகர் முஹமது யூனுஸ் உள்பட மூத்த தலைவர்களும் லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, டாக்காவில் உள்ள கொல்லப்பட்ட முன்னாள் அதிபரும் அவரது கணவருமான ஜியாவுர் ரஹ்மானின் நினைவிடத்தில் அவரது கல்லறைக்கு அருகில் கலீதா ஜியாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், கலீதா ஜியாவின் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பேசிய அவரது மகன் தாரிக் ரஹ்மான் பேசியதாவது:

“யாரேனும் அவரது (கலீதா ஜியா) வார்த்தைகளால் மற்றும் செயல்களால் காயமடைந்திருந்தால் அவரின் சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, கலீதா ஜியா யாரிடமாவது கடன் பெற்றிருந்தால் அவர்கள் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும், அவர்களது கடன் பாக்கிகள் அனைத்தும் திருப்பித் தரப்படும் எனவும் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா.
கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்பு! மோடியின் கடிதம் மகனிடம் ஒப்படைப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com