
அமெரிக்காவில் 10 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் அலாஸ்கா கடற்கரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து நோம் நகருக்கு 10 பேருடன் செஸ்னா 208பி என்கிற சிறிய ரக விமானம் வியாழக்கிழமை புறப்பட்டு சென்றது.
ஆனால் புறப்பட்ட 40 நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் தொடர்பு ரேடாரில் இருந்து மாயமானது.
இதையடுத்து மாயமான விமானத்தை தேடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் விமானத்தைத் தேடுவதற்காக கோடியாக் விமான நிலையத்திலிருந்து ஹெச்-130 ஹெர்குலஸ் விமானமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே மாயமான விமானம் அலாஸ்கா கடற்கரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.