
தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) குரங்கு ஒன்று ஏறியது. இதனால் ஏற்பட்ட மின்கசிவால் அந்த மின்னேற்று நிலையம் பழுதடைந்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் 6 மணி நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, 900 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, நாடு முழுவதும் திங்கள்கிழமையும் (பிப். 10) செவ்வாய்க்கிழமையும் (பிப். 11) தலா 90 நிமிஷங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று இலங்கை மின் வாரம் அறிவித்துள்ளது.