பொய் சொன்னதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்!

பொய் சொன்னதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் குறித்து...
ப்ரீதம் சிங்
ப்ரீதம் சிங்
Published on
Updated on
1 min read

சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீதம் சிங், பதவியேற்பின் போது நாடாளுமன்றக் குழுவில் பதவிப்பிரமாணம் செய்யும் போது பொய் கூறியது ஆதரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு 14,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப்ரீதம் சிங், இந்த ஆண்டு நவம்பரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாகவும் கூறினார்.

சிங்கப்பூர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது 10,000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்டும். அவ்வாறு விதிக்கப்பட்டால், அவர் பதவியை இழக்க நேரிடும். மேலும், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

ப்ரீதம் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனை அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யும் வரம்பை எட்டவில்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க... பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ.நா. மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் அறிவுறுத்தல்!

வழக்கு என்ன?

2021 ஆம் ஆண்டு நவம்பரில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவரிடம் காவல்துறை தவறாக நடந்துகொண்டதை தான் பார்த்ததாக முன்னாள் தொழிலாளர் கட்சி எம்.பி. ரயீசாகான் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இதற்கு தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவருமான ப்ரீதம் சிங், இந்த வழக்கு தொடர்பாக நாடாளுமன்றத்தில் தானும் நேரில் பார்த்ததாக பொய் சாட்சி கூறியுள்ளார். நாடாளுமன்றக் குழுவிடம் ப்ரீதம் சிங் பொய் சாட்சியம் அளித்தது கண்டறியப்பட்டு, ப்ரீதம் சிங்கை குற்றவாளி என துணை முதன்மை மாவட்ட நீதிபதி லூக் டான் தீர்ப்பளித்தார்.

ப்ரீதம் சிங் தப்பியது எப்படி?

இந்த நிலையில், இருமுறை பொய் கூறியதற்காக ப்ரீதம் சிங்குக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 14,000 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.9.06 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.

சிங்கப்பூர் சட்டப்படி 10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டாலே எம்.பி. பதவி பறிபோகும் என்று விதி இருக்கிறது. அப்படி இருக்கும் போது ப்ரீதம் எவ்வாறு தப்பினார் என்று விவாதம் ஆன நிலையில் ஒரேயொரு குற்றத்துக்காக 10,000 டாலர் அபராதம் விதிக்கப் பட்டிருக்க வேண்டும் என்றும் அவருக்கு இரு குற்றத்திற்காக இரண்டு முறை 7000 டாலர்கள் விதிக்கப்பட்டிருப்பதால் அவரது பதவி தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க... உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய அமைச்சர் பேச்சுவார்த்தை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com