எழுத்தாளரைத் தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை!

2022-ல் ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கிய வழக்கில் ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹாடி மாத்தர்
ஹாடி மாத்தர்AP
Published on
Updated on
1 min read

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிய ஹாடி மாத்தருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியில் இருந்து தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் - அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நியூயார்க்கில் 2022 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் ஒரு கல்வி நிலையத்தில் உரையாற்றினார். உரை நிகழ்வின்போது, மேடையேறிய ஹாடி மாத்தர் ருஷ்டியை வெறும் 27 நொடிகளில் 12 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.

இந்தத் தாக்குதலில் ருஷ்டியின் கழுத்து, கல்லீரல், குடல் உள்பட உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, அவரது வலது கண் பார்வையிழந்ததுடன், ஒரு கையும் செயல்பாட்டை இழந்தது.

தாக்குதலைத் தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த ருஷ்டியை ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் ஆறுவார சிகிச்சைக்குப் பின்னர், ருஷ்டி படிப்படியாகக் குணமடைந்தார்.

1988 ஆம் ஆண்டு ருஷ்டி வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதன் தொடர்ச்சியாகத்தான் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com