அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்ட்.! ஜாக்பாட் யாருக்கு?

அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்டை அறிமுகப்படுத்தியுள்ளார் டிரம்ப்..
அதிபர் டொனால்ட் டிரம்ப்..
அதிபர் டொனால்ட் டிரம்ப்..
Published on
Updated on
1 min read

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய சலுகை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புதிய தங்க அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இது புதிதாக குடிபெயர்வர்களுக்கு 5 மில்லியன்(சுமார் ரூ.43 கோடி) டாலர்களுக்கு விற்கப்படும் என்றும், இந்த அட்டை கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது “குடியுரிமைக்கான பாதை” என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், “நாங்கள் ஒரு கோல்டு கார்டை விற்பனை செய்யப் போகிறோம்.நாங்கள் அந்த கோல்டு கார்டுக்கு சுமார் 5 மில்லியன் டாலர் விலையை நிர்ணயிப்போம். அது உங்களுக்கு கிரீன் கார்டைவிட அதிக சலுகைகளை வழங்கும்.

இதையும் படிக்க: அதிபரைக் காப்பாற்ற முயன்று பிரபலமான ரகசிய உளவாளி 93 வயதில் மரணம்!

இது குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாக இருக்கும். இந்த அட்டையை வாங்குவதன் மூலம் பணக்காரர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். அவர்கள் நிறைய பணம் செலவழித்து, நிறைய வரிகளைச் செலுத்தி, நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள்” என்றார்.

இபி-5 விசாவுக்கு மாற்று ஏற்பாடா?

மேலும் இதுபற்றி லுட்னிக் கூறும்போது, “இது இபி-5 விசாவுக்கு மாற்று ஏற்பாடாக கூட இருக்கலாம். கிரீன் கார்ட்க்கு செலவளிக்கும் தொகை நேரடியாக அரசுக்குச் செல்லும். அமெரிக்காவில் முதலீடு செய்வதன் மூலம் குடியேறுபவர்களுக்கு கிரீன் கார்ட் கிடைக்கும்” என்றார்.

இந்தத் திட்டம் இரண்டு வாரங்களில் தொடங்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் டிரம்ப் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, நாடு கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர். விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்கள் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டது இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிக்க: 300 நோயாளிகள் பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் ஒப்புதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com