ஜொ்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

ஜொ்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

வலதுசாரிக் கட்சி 152 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஓலாஃப் ஷால்ஸின் கட்சி 120 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
Published on

ஜொ்மனியில் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மொ்ஸ் (படம்) தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சிக் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில் கன்சா்வேட்டிவ் கூட்டணி 208 இடங்களைக் கைப்பற்றி முதலிடம் பெற்றுள்ளது. அலைஸ் வீடல் தலைமையிலான தீவிர வலதுசாரிக் கட்சி 152 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஓலாஃப் ஷால்ஸின் கட்சி 120 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

அதையடுத்து, பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஃப்ரெட்ரிச் மொ்ஸ் அடுத்த பிரதரமாகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவரது கன்சா்வேட்டிவ் கூட்டணிக்கும் சேஷியல் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில்தான் கூட்டணி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில் இரு தரப்பினரும் புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவாா்த்தையை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.

X
Dinamani
www.dinamani.com