துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து விபத்து
துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து விபத்து

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து 27 புலம்பெயர்ந்தோர் பலி: 83 பேர் மீட்பு!

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்தது பற்றி..
Published on

துனிசியாவில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 83 பேர் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த நாட்டுத் தேசியப் பாதுகாப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த புதன்கிழமையன்று லிபியாவுடன், இத்தாலியில் உள்ள லம்பேடுசா தீவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள துனிசியா, ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும்போது 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். 83 பேர் மத்திய துனிசியாவில் உள்ள கெர்கென்னா தீவுகளில் மீட்கப்பட்டனர். இடம்பெயர்ந்த மக்கள் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஸ்ஃபாக்ஸ் நகரின் சிவில் பாதுகாப்புத் தலைவர் கூறியுள்ளார்.

இரண்டு படகுகளில் மொத்தம் 110 பேரை ஏற்றிச் சென்றதாகவும், படகுகளில் ஒன்று கவிழ்ந்தும், மற்றொன்று மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. 83 உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், படகில் காணாமல் போனவர்களைக் கடலோரக் காவல்படையினர் அந்தப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் கடல் வழியாகப் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதைத் தடுக்கும் நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் துனிசியா மேற்கொண்டு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த டிசம்பர் 18 அன்று ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த 20 பேர் கடலில் முழ்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மாயமாகினர்.

2024-ஆம் ஆண்டில், துனிசிய மனித உரிமைக் குழுவானது 600 முதல் 700 புலம்பெயர்ந்தோர் நாட்டின் கடற்கரையில் கப்பல் விபத்துகளில் இறந்ததாகப் பதிவு செய்துள்ளது. கடந்த 2023ல் 1,300-க்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்ததாக பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com