ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக அவரது தங்கை ஆன் ஆல்ட்மேன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புகாரில் ஆன் ஆல்ட்மேன் தெரிவித்ததாவது, 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆண்டுவரையில் சுமார் 9 ஆண்டுகளாக சாம் ஆல்ட்மேன், தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்தார். இதனால் அடைந்த மன உளைச்சல், மனச்சோர்வு, மன வேதனை இன்றளவிலும் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
இருப்பினும், ஆன் ஆல்ட்மேனின் குற்றச்சாட்டுக்கு சாம் ஆல்ட்மேன் உள்பட அவரது தாய் மற்றும் சகோதரர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆன் ஆல்ட்மேனின் குற்றச்சாட்டுக்கு சாம் ஆல்ட்மேன், அவரது தாய் மற்றும் சகோதரர்கள் மறுப்பு தெரிவிக்கும்விதமாக சாம் ஆல்ட்மேன் எக்ஸ் பக்கத்தில் ஓர் அறிக்கையையும் பதிவிட்டுள்ளார்.
அதில், ஆன் ஆல்ட்மேன் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதுபோல குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஆன் ஆல்ட்மேனின் அன்றாடச் செலவுகள் முதல் அவரது வாழ்க்கையின் அனைத்து செலவுகளையும் தாங்கள்தான் கவனித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
இருப்பினும், ஆன் ஆல்ட்மேன் தொடர்ந்து அதிகளவில் பணம்கேட்டு வருவதாகவும், அதற்கு மறுத்ததால், சாம் ஆல்ட்மேன் மீது பாலியல் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, சாம் ஆல்ட்மேன் மீது பாலியல் புகார் அளித்துள்ள ஆன் ஆல்ட்மேன், நஷ்ட ஈடாக ஒன்றரை லட்சம் டாலர் (ரூ. 1.28 கோடி) கோரியுள்ளார்.
இதையும் படிக்க: கனடா பிரதமர் ட்ரூடோவை ’பெண்ணே’ என்று அழைத்த எலான்!