ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு!

ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர் கால் தடங்களுடன் ஆராய்ச்சியாளர்கள்.
ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த டைனோசர் கால் தடங்களுடன் ஆராய்ச்சியாளர்கள்.
Published on
Updated on
1 min read

பிரிட்டனில் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த 200 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 டைனோசர் கால்தடங்கள், ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள ஒரு குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் இது போன்ற டைனோசர் காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.

சுமார் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என நம்பப்படும் இந்தக் காலடித் தடங்கள், ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் தேவார்ஸ் குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டன.

2024 ஆம் ஆண்டு ஜூனில், ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 100 தன்னார்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, ஒரு வாரம் அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்து டைனோசர் காலடித் தடங்களின் புகைப்படங்களை ஆவணப்படுத்தியது.

மேலும் படிக்க | லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீக்கு இரையான ரூ.10,770 கோடி சொகுசு பங்களா!

மெகலோசரஸ் மற்றும் தாவரவகை டைனோசர்களின் கால்தடங்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை சாதாரண டைனோசர்களைவிட இரண்டு மடங்கு பெரியதாக இருந்தன என்று பர்மிங்காம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குவாரி தொழிலாளியான கேரி ஜான்சன், 2023 ஆம் ஆண்டில் சாலைப் பணிகளுக்காக சுண்ணாம்புக் கற்களைப் பிரித்தெடுக்கும் போது இந்தக் காலடித் தடங்களைக் கண்டுபிடித்தார்.

வான்வழி ட்ரோன் புகைப்படத்தைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் 20,000 க்கும் மேற்பட்ட படங்களை எடுத்துள்ளனர். அவற்றின் கால்தடங்களின் மூலம் டைனோசர்களின் 3டி மாதிரிகளை உருவாக்கப் பயன்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குவாரி பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு ஆராய்ச்சியாளர்கள் காலடித் தடத்தின் புகைப்படங்களைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குவாரியின் பெரும்பகுதி ஆராயப்படாமல் இருக்கிறது. மேலும் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் கூடுதலான தடங்கள் மற்றும் டைனோசர் வாழ்க்கை பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் என்று டாக்டர் எட்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com