
காஸாவில் மீதான போரால் தரைமட்டமான கட்டடங்களின் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பீட்டாய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் - காஸா போரால் காஸாவில் பல பகுதிகள் முற்றிலுமான அழிவைச் சந்தித்துள்ளன. உணவு, எரிபொருள், மருத்துவம், உறைவிடம் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காஸா மக்களுக்கு தேவையான உதவிகளைப் வழங்க பல நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலால் தாக்கப்பட்டு, காஸாவில் இடிந்து தரைமட்டமான கட்டடக் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகாலம்வரையில் ஆகலாம் என்றும், ரூ. 10,000 கோடிக்குமேல் செலவாகலாம் என்றும் ஐ.நா. அவையின் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர், 2023-ல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டனர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர்.
இந்த நிலையில்தான், ஓராண்டுக்கும் மேலான இஸ்ரேல் - காஸா போரை நிறுத்த அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி, போர் நிறுத்தக் காலமான 6 வாரங்களுக்கு இருதரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) பிற்பகல் 2.45 மணியளவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதையும் படிக்க: அதிபராக பதவியேற்றவுடனேயே டிரம்ப் அமைச்சரவையில் விரிசல்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.