லாஸ் ஏஞ்சலீஸ் தீயில் வீட்டை இழந்த பிரபல தம்பதியர்!

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியினர் தங்களது வீட்டை இழந்துள்ளனர்.
ரியாலிட்டி டிவி தம்பதி!
ரியாலிட்டி டிவி தம்பதி!
Published on
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியினர் தங்களது வீட்டை இழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி கடந்த 7-ஆம் தேதி பரவத் தொடங்கிய காட்டுத் தீயில் இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 48,250 ஏக்கா் பரப்பளவில் வீடுகளும் பிற கட்டடங்களும் நாசமாகியுள்ளன. அதையடுத்து பல்வேறு பகுதிகளில் மருத்துவ அவசரநிலை அறிவிப்பட்டது.

சற்று தணிந்திருந்த இந்த காட்டுத் தீ மீண்டும் தீவிரமடைந்ததால் 50,000-க்கும் மேற்பட்டவா்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 48 கி.மீ. பரப்பிலான பகுதிகளில் காட்டுத் தீயின் தீவிரம் அதிகமிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லட்ச ரூபாய் முதலீட்டில் கோடிகளை அளித்த 2 நிறுவனங்கள்!

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ரியாலிட்டி டிவி தம்பதியான ஹெய்டி மாண்டாக் மற்றும் ஸ்பென்சர் பிராட் ஆகியோர் பசிபிக் பாலிசீட்ஸில் உள்ள தங்களது வீட்டை இழந்துள்ளனர். இத்தம்பதினர் மட்டுமின்றி மேலும் 20க்கும் மேற்பட்டோரும் பாலிசீட்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சொத்துகளை இழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ரியாலிட்டி டிவி தம்பதி உள்பட பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் வழக்கு தொடுத்துள்ளனர். அதில், லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் அதன் நகராட்சி நீர்த் துறையை குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் தண்ணீர் பிரச்னை காரணமாக தங்களது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com