எலான் மஸ்க்குடன் வேலை? அழைப்பு விடுக்கும் அமெரிக்க அரசு!

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையில் விண்ணப்பிக்க துறையின் எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையில் விண்ணப்பிக்க துறையின் எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் முன்னரே, புதிதாக அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) உருவாக்கப்படவுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்தவும், அரசின் செலவினங்களைக் குறைக்கவும் அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை உருவாக்கப்பட்டது.

இந்தத் துறையை நிர்வகிப்பதற்காக தலைவர்களாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கும், இந்திய - அமெரிக்கத் தொழிலதிபரும் குடியரசுக் கட்சியின் முக்கியத் தலைவருமான விவேக் ராமசாமியும் நியமிக்கப்பட்டனர். இருந்தபோதிலும், 2026 ஆம் ஆண்டு ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் தேர்தலில் போட்டியிடவிருப்பதால்தான், தற்போது பதவி விலகுவதாக விவேக் ராமசாமி கூறி விலகி விட்டார்.

தற்போது, இந்தத் துறையின் தலைவராக எலான் மஸ்க் மட்டுமே உள்ளார். இந்த நிலையில், இந்தத் துறையின் ஆள்சேர்ப்பு பணியும் நடைபெற்று வருகிறது. மென்பொருள் பொறியாளர்கள், தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள், நிதி ஆய்வாளர்கள், மனித வள வல்லுநர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு முழுநேரம் பணியாற்ற உலகத்தரம் வாய்ந்த பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பின் தகுதிகள், எலான் மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், தி போரிக் கம்பெனி முதலான தனியார் நிறுவனங்களில் நடத்தப்படும் ஆள்சேர்ப்பு அறிவிப்பைப்போல் உள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com