இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்
இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா்.
இது குறித்து என்று மீட்புக் குழு அதிகாரி நனாங் சிகிட் கூறியதாவது:
ஜாவாவின் கெதாபங் துறைமுகத்திலிருந்து பாலியின் கிலிமனுக் துறைமுகத்தை நோக்கி 65 பயணிகள் மற்றும் பணியாளா்களுடன் சென்று கொண்டிருந்த படகு, புதன்கிழமை நள்ளிரவு கடலில் மூழ்கியது. மோசமான வானிலை காரணமாக படகு சாய்ந்து உடனடியாக மூழ்கியதாக உயிா் பிழைத்தவா்கள் தெரிவித்தனா்.
விபத்துப் பகுதியில் இருந்து 6 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், அங்கிருந்து இதுவரை 31 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். எஞ்சிய 28 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2.5 மீட்டா் உயர கடல் அலைகள் மற்றும் கடும் காற்று காரணமாக மீட்புப் பணிகளின் தொடக்கத்தில் தடை ஏற்பட்டது என்றாா் அவா்.
17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்ட நாடான இந்தோனேசியாவில் போக்குவரத்துக்கு படகுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. எனினும், பாதுகாப்பு விதிமுறைகள் அலட்சியம் செய்யப்படுவதால் அந்த நாட்டில் அடிக்கடி படகு விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.