
செக் குடியரசு நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசின் தலைநகர் பிராக் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (ஜூலை 4) மதியம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்நாட்டின் ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகது. பிராக் நகரத்தின் சுரங்கப் பாதை ரயில்கள் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் அங்கு மின்சாரம் மீண்டும் சீரானதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் சில பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதகாவும், அதை சரிசெய்யும் வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அந்நாட்டு பிரதமர் பீட்டர் ஃபியாலா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
செக் குடியரசின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதே இந்த மின் தடைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முதலில், இது சைபர் குற்றவாளிகளின் செயலாக இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இதன் பின்னணியில் சைபர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான சதி இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இத்துடன், அந்நாட்டின் 8 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 துணை மின்நிலையங்களில் மின்சார விநியோகம் சீரானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் டிராம், ரயில் உள்ளிட்டவை நடுவழியில் நின்றதால், மக்கள் மிகவும் அவதிக்குள்ளாதாகினர். இருப்பினும், இந்த மின்தடையால், பராக்கிலுள்ள வாக்லவ் ஹாவெல் விமான நிலையம் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.