
வடக்கு காஸாவில் நேற்றிரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்களும், கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இது குறித்து காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இதற்கிடையில், காஸாவில் நேற்றிரவு நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 5 இஸ்ரேலிய வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடிபொருள்கள் வெடித்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
இஸ்ரேலும் ஹமாஸும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்த திட்டத்தைப் பரிசீலித்து வரும் நிலையில், இஸ்ரேஸ் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
2023 அக்டோபா் 7 முதல் தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 59,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா், இதில் 70 சதவீதம் போ் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இஸ்ரேல் தரப்பில், இதுவரை 1,983 போ் உயிரிழந்ததாகவும், இதில் 860 போ் ராணுவ வீரா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.