
டொனால்ட் டிரம்ப்பின் பெயர் நோபல் பரிசுக்கு மீண்டும் ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திங்கள்கிழமை(ஜூலை 7) டிரம்ப்பிடம் பேசியபோது, டிரம்ப்பின் பெயரை இந்த உயரிய கௌரவத்துக்கு பரிந்துரைத்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன், இது தொடர்பாக நோபல் கமிட்டிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தையும் டிரம்ப்பிடம் வழங்கியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார்.இந்தப் போரை நிறுத்தியதற்கு பாகிஸ்தான் அரசு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என பாகிஸ்தானும் தெரிவித்திருந்தது. இப்போது இஸ்ரேலும் அதனையே வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், இனி வரும் நாள்களில், இஸ்ரேலுடனான தமது நெருங்கிய உறவை பயன்படுத்தி காஸா போரையும் டிரம்ப் முடிவுக்கு கொண்டுவரப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.