டிராகன் விண்கலத்திலிருந்து வீரர்களை மீட்கும் பணி தொடக்கம்!

டிராகன் விண்கலத்திலிருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்களை மீட்கும் பணி தொடக்கம்!
கடல்பகுதியில் இறங்கிய ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம்
கடல்பகுதியில் இறங்கிய ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம்
Published on
Updated on
1 min read

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நேற்று பிற்பகலில் புறப்பட்ட டிராகன் விண்கலம், இன்று கலிஃபோர்னியா அருகே கடலில் இறங்கியது.

விண்கலத்தின் கதவை திறக்க அமெரிக்க கடற்படை வீரர் இருவர், டிராகன் விண்கலம் மீது ஏறி அதனை மீட்புப் படகுடன் இணைத்து, படகுக்கு அருகே கொண்டு வந்து, படகில் பாதுகாப்பாக டிராகன் விண்கலம் ஏற்றப்பட்டது.

பூமிப் பரப்புக்குள் நுழைந்து, கடுமையான வெப்பத்தைக் கடந்து கடலில் விழுந்ததால், விண்கலத்தின் நிறமே மாறியிருக்கிறது.

டிராகன் விண்கலத்தின் கதவுகளை உள்ளிருந்தும் வெளியே இருந்தும் திறக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவுடன் ‘ஆக்ஸியம்-4’ விண்வெளி திட்டத்தில் சர்வதேச விண்வெளி மையம் சென்றிருந்த நான்கு விண்வெளி வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்த பிறகு ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மூலம் இன்று பகல் 3.20 மணியளவில் கடலில் இறங்கியது.

அதிலிருந்து வீரர்களை மீட்க அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் முயன்று வருகிறார்கள். டிராகன் விண்கலம் மீது, அமெரிக்க கடற்படை வீரர்கள் இருவர் ஏறி, கதவைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த விண்கலத்தின் கதவுகளை உள்ளிருந்தும் வெளியே இருந்தும் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது டிராகன் விண்கலம் விழுந்த இடத்துக்கு அருகே ஒரு படகும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் படகுக்கு அருகே டிராகன் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து வீரர்கள் டிராகன் விண்கலத்திலிருந்து வெளியே கொண்டு வரும் பணி நடைபெறவிருக்கிறது.

வெளியே வரும் விண்வெளி வீரர்கள், இதுவரை செயற்கை ஆக்ஸிஜனை சுவாசித்திருப்பார்கள் என்பதால், அவர்கள் இயற்கையான ஆக்ஸிஜனை சுவாசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விண்வெளியிலிருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த விண்கலம், பாராசூட்களின் உதவியுடன் வேகம் குறைக்கப்பட்டு ‘ஸ்பிளாஷ் டௌன்’ முறையில் கடலில் இறக்கப்பட்டது. பாராசூட்கள் இரண்டு கட்டங்களாக விரிந்தன. முதலில், விண்கலத்தை நிலைப்படுத்தும் பாராசூட்கள் சுமாா் 5.7 கி.மீ. உயரத்தில் விரிந்தன. அதைத் தொடா்ந்து இரண்டு கி.மீ. உயரத்தில் முதன்மை பாராசூட்கள் விரிந்து, பாதுகாப்பாக கடலில் இறங்கியது.

கடலில் தயாராகக் காத்திருந்த மீட்புக் குழுவினா், வீரா்கள் இருக்கும் விண்கலத்தின் முனைப் பகுதியை மீட்புப் படகுடன் இணைத்து, அதனைக்கொண்டு செல்வா். பின்னா், அதன் கதவைத் திறந்து, வீரா்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரவிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com