டிரம்ப்புக்கு ரத்தக்குழாய் தேக்க பாதிப்பு

டிரம்ப் அரியவகை நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி...
டிரம்ப் அரியவகை நரம்பு நோயால் பாதிப்பு
டிரம்ப் அரியவகை நரம்பு நோயால் பாதிப்பு AP
Published on
Updated on
2 min read

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு ரத்தக் குழாய் தேக்க பாதிப்பு (க்ரோனிக் வெனஸ் இன்சஃபியன்ஷி) கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய், 70 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்படும் பொதுவான, தீவிரமற்ற பிரச்னையாகும்.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் (வயது 79), இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் அதிபரானது முதல் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தலைப்புச் செய்தியில் இடம்பெற்று வருகிறார்.

இதுவரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே நான்தான் மிகவும் ஆரோக்கியமான அதிபர் என்று டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும் இந்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் பஹ்ரைன் பிரதமருடன் டிரம்ப் கை குலுக்கிய புகைப்படத்தில், அவரது கைகளில் காயம் ஏற்பட்டிருந்த புகைப்படமும் பேசுபொருளானது.

இதையடுத்து, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.

நரம்பு நோயால் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்பட்ட சிரை (ரத்த நாளம்) குறைபாடு (chronic venous insufficiency) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது:

“சமீபத்தில் அவரது கால்களில் வீக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ரத்த நாள சோதனை உள்பட விரிவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்ப்ரின் மாத்திரிகளை டிரம்ப் எடுத்துக் கொள்வதால், அடிக்கடி பிறருடன் கைகளைக் குலுக்குவதால் ஏற்படும் திசு சேதத்தால் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

தீவிரமான நரம்பு பிரச்னை எதுவும் இல்லை, அனைத்து பரிசோதனை முடிவுகளும் சரியான வரம்புக்குள் இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

AP

வெள்ளை மாளிகை மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”70 வயது மேற்பட்டவர்களுக்கு இதுபோன்ற நரம்பு பிரச்னை வருவது சாதாரணமானது. கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதில், டிரம்புக்கு இதய செயலிழப்பு, சிறுநீரகப் பிரச்னை அல்லது வேறெந்த நோய்க்கான அறிகுறியும் இல்லை.

டிரம்ப் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருகிறார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள்பட்ட சிரை குறைபாடு என்றால் என்ன?

அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கண்டுபிடிக்கப்பட்ட நரம்பு பிரச்னை நாள்பட்ட சிரை குறைபாடு (chronic venous insufficiency) என்று அழைக்கப்படுகிறது

ஈர்ப்பு விசைக்கு எதிராக கால்களில் இருந்து ரத்த நாளம் வழியாக இதயத்துக்கு ரத்தம் மேல்நோக்கி செல்கிறது. நாள்பட்ட சிரை குறைபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சரியாக செல்லாமல், மூட்டுப் பகுதிகளில் ரத்தம் தேங்கி வீக்கமடைகிறது.

இது தீவிரமான பிரச்னை இல்லை என்றும் வயதானவர்களுக்கு வரும் பொதுவான பிரச்னை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வயதானவர்களில் 10 முதல் 35 சதவிகிதம் வரையிலானவர்கள் இந்தப் பிரச்னையை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Summary

US President Donald Trump has been diagnosed chronic venous insufficiency, the White House has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com