
பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தில், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு அயர்லாந்தின், மெகுவயர்ஸ்பிரிட்ஜ் எனும் கிராமத்தில், இன்று (ஜூலை 23) காலை 8 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், 2 பேர் கொல்லப்பட்டதுடன், 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகாத நிலையில், உள்ளூர் மோதல் என வடக்கு அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெம்மா டோலன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: காஸா தேவாலயம் தற்செயலாகத் தாக்கப்பட்டது: இஸ்ரேல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.