
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை இரவு, மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாகவும், இதனால் மிகப்பெரிய அணு ஆயுதப் போர் உருவாவது தவிர்க்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான், காங்கோ - ருவாண்டா இடையே போர்களை நிறுத்தியிருக்கிறோம் என்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கூறினார.
அவர்கள் ஐந்து ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தினர். அவர்களை நான் அழைத்துப் பேசினேன். கேளுங்கள். உங்களுடன் இனி வர்த்தகம் இருக்காது. இவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்கு நல்லதல்ல என்றேன். அவர்கள் இருவருமே மிக சக்தி வாய்ந்த அணு ஆயுத நாடுகள். அவர்களை அப்படியே விட்டிருந்தால் யாருக்குத் தெரியும், அது எங்குக் கொண்டுசென்று முடிந்திருக்கும் என்று. ஆனால், நான் அதனை நிறுத்தினேன் என்று கூறியிருக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியதாக நேற்று பேசியது வரை டொனால்ட் டிரம்ப் 25 முறை கூறிவிட்டார். நேரடியாகவே இந்தியா அதனை மறுத்தபோதும்கூட அமெரிக்க அதிபர் இந்தப் பேச்சை நிறுத்தவில்லை.
25வது முறையாக டொனால்ட் டிரம்ப் இது பற்றி பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. டொனால்ட் டிரம்போ வெள்ளி விழாவே கண்டுவிட்டார் அவரது பேச்சின்மூலம், ஆனால் பிரதமர் மோடி இன்னமும் மௌனம் காத்து வருகிறார் என்று கூறியிருக்கிறது.
கடந்த 73 நாள்களில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 முறை இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்துப் பேசியிருக்கிறார். ஆனால் பிரதமர் மோடியை இன்னமும் அமைதியாகவே உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.