3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகள்! கடைசியாக தெரிய வந்த உண்மை!!

3.6 கோடி சொத்துக்காக சண்டையிட்ட பிள்ளைகளுக்கு, தாங்கள் தத்துப் பிள்ளை என தெரிந்ததால் ஏமாற்றம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சீனாவில், தந்தைக்குச் சொந்தமான ரூ.3.6 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அண்ணன், தங்களை சண்டையிட்டுக் கொண்ட நிலையில், இருவருமே தத்துப் பிள்ளைகள் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவின் தியான்ஜின் நகரைச் சேர்ந்த சன் என்பவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு, தன்னுடைய சொத்துகளை மகன் பெயரில் எழுதிவைத்துவிட்டு, குறிப்பிட்ட சொத்துகளை மகளுக்கு அளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், அதனை அப்பெண் ஏற்காமல் நீதிமன்றம் சென்றிருந்தார். இது குறித்து சன் மனைவி கூறுகையில், மகளை நாங்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தோம். ஆனால் சொந்த மகளைப் போலவே வளர்த்து வந்தோம். எங்களது இறுதிக் காலத்தில் மகன்தான் எங்களைப் பார்த்துக் கொண்டார். அதனால் வீட்டை அவனுக்குக் கொடுத்து விட்டோம். அதற்கு மாற்றாக தங்கைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சொத்துகளை பெயர் மாற்றும் ஆவணங்களில் தந்தையின் கையெழுத்து மட்டும்தான் இருக்கிறது. அதனால், தாயின் பங்கை தனக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருவரும் நீதிமன்றம் சென்றனர்.

அப்போது, நீதிமன்றத்தில், சகோதரனை தத்தெடுத்து வளர்த்ததற்கான சான்றிதழ்களை தங்கை தாக்கல் செய்தார். இதைக் கேட்டதும், சகோதரன் நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். இந்த நிலையில், அப்பெண்ணையும் நாங்கள் தத்தெடுத்துதான் வளர்த்தோம் என்ற உண்மையை தாய் சொல்ல, அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. சொத்துக்காக சண்டையிடும் இருவருமே அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இல்லை என்பது.

மேலும், பெற்றோரிடமிருந்து அப்பெண் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்றுவிட்டதையும், மகன்தான் பெற்றோரை கடைசி காலம் வரை பார்த்துக் கொள்வதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சொத்துகளை மகனே வைத்துக் கொள்ளவும், அதற்குரிய இழப்பீட்டைக் குறிப்பிட்டு, தங்கைக்கு சகோதரன் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் சொத்து கிடைத்துவிட்டது. நீங்கள் பிள்ளைகள் இல்லை என்பது தெரிந்துவிட்டது என்றும், பெண்ணுக்கு தத்தெடுத்து வளர்த்ததைச் சொன்ன பெற்றோர், பிள்ளையிடம் சொல்லவில்லையே என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com