பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படும் கொடுமை
பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!
Updated on
1 min read

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. காஸா மீதான பட்டினிப் போரை நிறுத்துமாறு கோரிக்கையும் விடுத்து வருகின்றன.

இதனிடையே, காஸாவில் அவ்வப்போது கிடைக்கும் நிவாரண உதவிகளையும் சிலர் அபகரித்துக் கொண்டு, அவற்றை அசுர விலைக்கு விற்று வருகின்றனர். உணவுப் பொருள்கள், அவற்றின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகம் விற்கப்படும் அவல நிலையில் காஸா மக்கள் திளைத்துள்ளனர்.

காஸாவில் உணவின்றி தவிக்கும் பாலஸ்தீனியர்கள்
காஸாவில் உணவின்றி தவிக்கும் பாலஸ்தீனியர்கள்AP

இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பார்லே ஜி பிஸ்கட்டை காஸாவில் 2,349 ரூபாய்க்கு (24 யூரோ) விற்கின்றனர். ஒரு கிலோ சர்க்கரை ரூ. 4,914 ஆகவும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ, 4,177 , ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ. 1,965 , ஒரு கிலோ ரூ. 4,423 , ஒரு கப் காஃபி ரூ. 1,800 ஆகவும் விற்கப்படுகிறது.

போரில் இருந்து உயிர் பிழைத்தாலும், பட்டினியால் காஸா மக்கள் பலியாகின்றனர். இந்த நிலையில், நிவாரண உதவிகள் பறிபோவதாலும் சிலர் பலியாகும் வாய்ப்புகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com