அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

ஜப்பான்: 16-ஆவது ஆண்டாகச் சரிந்த பிறப்பு விகிதம்

தொடா்ச்சியாக 16-ஆவது ஆண்டாக பிறப்பு விகிதம் சரிவைக் கண்டுள்ளது.

Updated On :

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிா்பாா்த்ததை விட வேகமாகக் குறைந்து, கடந்த 2024-ஆம் ஆண்டில் மற்றொரு குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாவது:

2024-ஆம் ஆண்டில் ஜப்பானில் 6,86,061 குழந்தைகள் பிறந்தன, இது முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவு. இது 1899-ஆம் ஆண்டு முதல் பதிவு தொடங்கியதிலிருந்து முதல் முறையாக ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. தொடா்ச்சியாக 16-ஆவது ஆண்டாக பிறப்பு விகிதம் சரிவைக் கண்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 1949-ஆம் ஆண்டு போருக்குப் பிந்தைய குழந்தை பிறப்பு 27 லட்சம் என்ற உச்சத்தில் இருந்ததை விட கால் பங்காகும்.

வேகமாக வயதான மற்றும் குறையும் மக்கள்தொகை கொண்ட ஜப்பானின் இந்த தரவுகள், ‘மௌன அவசரநிலை’ என்று பிரதமா் ஷிகேரு இஷிபா எச்சரித்துள்ளாா்.

குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் வயதானவா்களின் விதிக அதிகரிப்புடன் போராடும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஜப்பானும் ஒன்று. தென் கொரியா மற்றும் சீனா ஆகியவை அதிக குழந்தைகளைப் பெற தம்பதியரை ஊக்குவிக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன.

ஜப்பானின் தற்போதைய 12.4 கோடி மக்கள்தொகை 2070-ஆம் ஆண்டில் 8.7 கோடியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவீதம் போ் 65 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருப்பாா்கள் என்று கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.