
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவப்படைகளின் தளபதிகளுக்கு பதிலாக, புதிய தளபதிகளை நியமித்து அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார்.
ஆபரேஷன் ரைஸிங் லயன் என்ற பெயரில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலுள்ள ராணுவ தளவாடங்கள், அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள் உள்ளிட்டவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்தத் தாக்குதலில், ஈரானின் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல். முஹம்மது பகேரி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல். ஹொசைன் சலாமி உள்ளிட்ட முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கொல்லப்பட்ட தளபதிகளுக்கு பதிலாக புதிய தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல். அப்தொல்ரஹிம் மௌசவி என்பவரும், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைவராக முஹம்மது பக்போர் என்பவரையும் அந்நாட்டு உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கக் கூடும் எனும் சூழல் நிலவி வருவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 1979-ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியின்போது ஈரானின் புரட்சிகர காவல் படையானது உருவாக்கப்பட்டது. இது, ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதப்படைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.