
ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம், “இஸ்ரேல் 4கே தொழில்நுட்பத்தில் நமது கண்களின் முன்பாக காஸாவில் இனப்படுகொலையை நடத்திவருகிறது” எனக் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - காஸா போர் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலினால் காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 55,000 கடந்துள்ளது.
ஜேவியர் பார்டெம் நடித்துள்ள எஃப்1 படத்தின் புரமோஷன் ஒன்றில் தொலைக்காட்சி நேரலையில் தனது பாலஸ்தீன ஆதரவு கருத்தை தைரியமாகக் கூறியதால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் குறித்து கடுமையாக விமர்சித்தார். உடன் இருந்த அலிசா ஃபரா கிரிஃபினின் பதிவுகளைச் சுட்டிக்காட்டி கண்டித்துப் பேசியதும் மிகவும் சர்ச்சையானது.
பின்னர், வெரைட்டி ஊடகத்திற்காக ரெட் கார்பெட் நேர்காணலில் அவர் பேசியதாவது:
4கே தொழில்நுட்பத்தில் நிகழும் இனப்படுகொலை
நாம் புனைவுகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் நிஜ உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.
உண்மையான உலகில், காஸாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் பலியாகிறார்கள்.
4கே தொழில்நுட்பத்தில் நமது கண்களின் முன்பாக இனப்படுகொலை நடந்தேறி வருகிறது.
குழந்தைகளைக் கொல்ல வெடிகுண்டுகளை அளிக்கும் அமெரிக்காவின் பொருளாதார ஆதரவுகள் நிறுத்தப்பட வேண்டும்.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுடனான நட்புறவை முறித்துக்கொள்ள வேண்டும். வார்தைகள் பேசியது போதும், நமக்குத் தேவை செயல்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.