வெடித்துச் சிதறியது ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியது பற்றி...
Big explosion rocks Elon Musks SpaceX base during Starship testing
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியதுX
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் இன்று சோதனையின்போது வெடித்துச் சிதறியது.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் இன்று(வியாழக்கிழமை) சோதனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் இந்த ராக்கெட் சோதனையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சோதனை நேரத்துக்கு சற்று முன்பாக என்ஜின் இயக்கப்பட்ட நிலையில் ராக்கெட் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்பாகவும் புகைமூட்டமாகவும் காணப்பட்டது. இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த இந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை வருகிற ஜூன் 29 ஆம் தேதி விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com