நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்கள்!

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் கட்டடங்கள் சரிந்து விழுந்ததைப் பற்றி...
செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்களைப் பார்த்த நெதன்யாகு.
செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்களைப் பார்த்த நெதன்யாகு.
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் பிரதமர் செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நிலவிவருகிறது. இரு நாடுகளும் கடுமையாக தாக்கிக் கொண்டு 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், பலர் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு இஸ்ரேலில் இன்று(ஜூன் 19) காலை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதில் 1000 படுக்கைகள் கொண்ட சோரோக்கா மருத்துவமனை கடுமையான தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என பலர் தலைதெறிக்க ஓடிய விடியோக்களும் இணைத்தில் வைரலாகின.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரும் பீர்ஷெபா நகரத்தின் மேயருடன் ரூபிக் டானிலோவிச்சுடன் சென்று அங்கு மருத்துவமனையின் நிலைமையை கவனித்தார்.

அங்கு சென்ற நெதன்யாகு செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் ஈரானிய ஏவுகணைகளைத் துல்லியமாகத் தாக்குகிறோம். ஆனால், அவர்கள் மருத்துவமனையைத் தாக்குகிறார்கள். அங்கு மக்கள் எழுந்து ஓடக்கூட முடியாத நிலையில் உள்ளனர்” என்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தலைநகர் டெல் அவிவ்வில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்த கட்டடத்தின் இடிபாடுகள் சரிந்து விழுந்தன.

இந்த விடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. கட்டடங்கள் சரிந்து விழுந்தாலும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செய்தியாளர்களின் உரையாற்றினார்.

இதையும் படிக்க | உ.பி. முதல் தெஹ்ரான் வரை... கொமேனியின் மூதாதையர் இந்தியர்களா? பின்னணி என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com