நான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா: டெலிகிராம் பாவெல் துரோவ்

நான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா என்று டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கூறியுள்ளார்.
pavel dhurov
டெலிகிராம் நிறுவனர்Center-Center-Chennai
Published on
Updated on
1 min read

டெலிகிராம் சமூக தளத்தை நிறுவியவரும், கோடீஸ்வரர்களில் ஒருவருமா பாவெல் துரோவ், தான் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு அப்பா என்று தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், சொந்த வாழ்க்கை பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, என் நண்பருக்கு உதவுவதற்காக, விந்தணுவை தான்னம் செய்ய நான் தொடங்கிய மருத்துவமனையின் மூலம், சுமார் 12 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் துரோவ்.

இதையும் படிக்க.. ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

பிரான்ஸில் எவ்வித மோசமானக் குற்றச்சாட்டுகளுக்கும் தான் ஆளாகவில்லை என்று கூறியிருக்கும் துரோவ், தனக்கு அதிகாரப்பூர்வமாக 6 குழந்தைகள் உள்ளனர். மூன்று வெவ்வேறு துணைகள் மூலம் பிறந்த இவர்கள்தான் எனது 13.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுக்கு வாரிசு என்றும் தெரிவித்துள்ளார்.

எனது ஆறு குழந்தைகளுக்கும் சமமான உரிமை உள்ளது. என் மரணத்துக்குப் பின் அவர்கள் சொத்துக்காக சண்டையிடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் அவர்களது 30 வயது வரை அவர்களுக்கு சொத்துகளைக் கொடுக்க மாட்டேன். அவர்கள் சராசரி மனிதர்களைப் போலவே வாழ வேண்டும். அவர்களை அவர்களே கட்டமைத்துக் கொண்டு, அவர்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கை நம்பி அவர்கள் வாழக் கூடாது என்று கூறியுள்ளார்.

எனது வேலை நிமித்தமாக எனக்கு இருக்கும் ஏராளமான விரோதிகள் காரணமாக, 40 வயதாகும் துரோவ், இப்போதே உயில் எழுதி வைக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com