வாஷிங்டன் வந்த டூம்ஸ்டே விமானம்! யுஎஸ்-ஈரான் பதற்றத்தை அதிகரிக்கும் நைட்வாட்ச்!

வாஷிங்டன் வந்த டூம்ஸ்டே விமானத்தால் யுஎஸ்-ஈரான் பதற்றம் அதிகரித்துள்ளது.
US flight
டூம்ஸ்டே விமானம்from video
Published on
Updated on
1 min read

ஈரானுக்கு எதிரான தாக்குதலில் நேரடியாக அமெரிக்கா களமிறங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அணுகுண்டுகளைத் தாங்கும் திறன்பெற்ற டூம்ஸ்டே விமானம் வாஷிங்டன் வந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

போயிங் இ-4பி நைட்வாட்ச் என்ற பெயரில் அமெரிக்க பாதுகப்புத் துறையின் மிகப் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றாக உள்ளது. இது செல்லமாக டூம்ஸ்டே என்று அழைக்கப்படுகிறது.

வாஷிங்டன் விமான நிலையத்துக்கு அருகே விமானப் படைத் தளத்தில் இந்த விமானம் செவ்வாய்க்கிழமை இரவு தரையிறங்கியிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தொடர்ந்து, இந்த விமானம் வாஷிங்டன் வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இதையும் படிக்க.. இஸ்ரேல் மீது ஏவப்படும் செஜ்ஜில் ஏவுகணை! அவ்வளவு மோசமானதா? முழு விவரம்

நாட்டில் அணு ஆயுதப் போர் அல்லது தேசிய பேரழிவின்போது, அமெரிக்காவை ஆள, வான்வழி இராணுவ கட்டளை மையமாக செயல்படும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டது இந்த விமானம்.

வழக்கமான பயிற்சி அல்லது பராமரிப்புப் பணிகளுக்காக மட்டுமே இயக்கப்படும் இந்த விமானம் தற்போது வாஷிங்டனில் தரையிறங்கியருப்பது ஏதோ விநோதமான அல்லது இயற்கைக்கு மாறான விஷயங்கள் நடக்கப்போவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா ஓரிரு நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தி, அதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் மீது தாக்கி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து போர் தொடங்கிவிட்டதாகவும், சரி செய்யவே முடியாத சேதத்தை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்றும், ஈரான் மதகுரு கமேனி எச்சரித்திருந்த நிலையில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com