அபு அலி கலீல்
அபு அலி கலீல்

ஹிஸ்புல்லா தலைவரின் பாதுகாவலா் படுகொலை

Published on

இஸ்ரேல் ராணுவத்தால் கடந்த செப்டம்பா் மாதம் கொல்லப்பட்ட, லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸரல்லாவுக்கு நீண்டகாலமாக பாதுகாப்பு அளித்துவந்த அபு அலி கலீல் படுகொலை செய்யப்பட்டாா்.

இராக்கில் தங்கியிருந்த அவா் அண்டை நாடான ஈரானுக்குச் சென்றிருந்தபோது இஸ்ரேல் படையினா் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும், அவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.

X
Dinamani
www.dinamani.com