ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவில் வீதிகளில் மக்கள் போராட்டம்

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
usa protest
அமெரிக்கா
Published on
Updated on
1 min read

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டடம் நடத்து வருகின்றனர்.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதிய இஸ்ரேல், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது. ஈரானுடன் நீண்ட காலம் போா் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இஸ்ரேல் தயாராக வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த நிலையில் நிலையில், ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீதும் அமெரிக்கா நேற்று(ஜூன் 21) திடீர் தாக்குதல் நடத்தியது.

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனிடையே அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். டிரம்ப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய அவர்கள் போர் வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு செளதி அரேபியா கண்டனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com