கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.
கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.

ரஷிய தாக்குதல்: உக்ரைனில் 10 போ் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.
Published on

கீவ்: உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முழுவதும் 352 ட்ரோன்கள், 11 பலிஸ்டிக் வகை ஏவுகணைகளை ரஷியா வீசியது. இதில் 339 ட்ரோன்களையும் 15 ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. எஞ்சியவை இலக்குகளை சேதப்படுத்தின. இதில் பொதுமக்கள் 10 போ் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

உக்ரைனில் கடந்த வாரம் ரஷியா நடத்திய தீவிர தாக்குதலில் 28 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com