இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளிக்குப் பயணம்!

சுபான்ஷு சுக்லா நாளை விண்வெளிப் பயணம் செய்யவிருப்பதைப் பற்றி...
விண்வெளி செல்லும் குழுவினருடன் சுபான்ஷு சுக்லா (இடமிருந்து 3-வது..)
விண்வெளி செல்லும் குழுவினருடன் சுபான்ஷு சுக்லா (இடமிருந்து 3-வது..)
Published on
Updated on
1 min read

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழு நாளை(ஜூன் 25) விண்வெளிக்கு செல்ல உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா உள்பட நான்கு பேர் குழு, நாளை(ஜூன் 25) விண்வெளிக்கு செல்ல உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுபான்ஷு சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனர்.

முன்னதாக, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம், அவர்கள் பயணிக்க இருந்தனர்.

திட்டமிடப்பட்ட ஏவுகணை பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷியப் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் ஏவுகலன் ஏவுதல் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜூன் 19-ஆம் தேதி அந்தப் பயணம் திட்டமிடப்பட்ட நிலையில், 6-வது முறையாகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இவர்கள் நாளை விண்வெளிக்குச் செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் செல்லும் விண்கலம் நாளை அதிகாலை 2:31 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12:10 மணிக்கு) ஏவப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com