இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீதான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு
இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
Published on
Updated on
1 min read

இஸ்ரேல் மீதான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பானது, அடுத்த 24 மணிநேரத்தில் வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அறிவித்தார்.

ஆனால், டிரம்ப்பின் போர் நிறுத்த முடிவுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், இஸ்ரேல்தான் ஈரான் மீது போரைத் தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.

தற்போதைக்கு போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியதால், நாங்களும் நிறுத்தி விட்டோம்.

இருப்பினும், ஈரானின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னரே தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடைசி நிமிடம்வரையில் போராடிய ஈரானிய ஆயுதப் படைகளுக்கும் அப்பாஸ் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com