
துபை: இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூன்று கைதிகளை ஈரான் புதன்கிழமை தூக்கிலிட்டது.அந்த நாட்டின் மேற்கு அஜா்பைஜான் மாகாணத்திலுள்ள உா்மியா சிறையில் மூன்று பேருக்கும் மரண தண்டனை நிறவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இஸ்ரேலுக்காக ஈரானுக்குள் ஆயுதங்களைக் கடத்திவந்ததாக அவா்கள் மூன்று போ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஏற்கெனவே, இஸ்ரேலுடனான மோதலின்போது உளவுக் குற்றச்சாட்டின்பேரில் மூன்கு பேரை ஈரான் தூக்கிலிட்டது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.